உங்க ஓட்டர் ஐடிலையும் ஏதாவது மாத்தணுமா..? இல்ல புதுசா ஐடி வாங்கணுமா? அப்போ இந்த தேதிக்குள்ள சீக்கிரம் பண்ணிடுங்க…

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு, வாக்களர் அடையாள அட்டை ஆகியவை உள்ளது. அவற்றில், வாக்காளர் அடையாள அட்டையானது நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் முதல் உள்ளுர்களில் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் என அனைத்து விதமான தேர்தலில் வாக்களிக்கும் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது.

இந்நிலையில், இந்த வாக்களர் அடையாள அட்டையை பெற 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு ஜனவரி மாதம் புதிய வாக்காளர் பட்டியியல் வெளியிடப்படும்.

அந்த வகையில், இந்த ஆண்டு புதிதாக வாக்களர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வருகிற நவம்பர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுபிக்கப்பட்ட இறுதி வாக்களர் பட்டியியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM