மின்சாரத்தை இலவசமா அல்லது மானியமா பயன்படுத்துறீங்களா? உடனே படிங்க…!

0
16
Current News 2023

தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு அரசாங்கம் 100 யூனிட் இலவசமாக கொடுகிறது. அதோடு விவசாயத்திற்கு முழுவதுமே இலவசமாகவே மின்சாரத்தை வழங்கிவருகிறது. 500 யூனிட் மின்சாரத்தை வீடுகளுக்கு மானிய விலையில் வழங்குகிறது. மேலும் விவசாயத்திற்கு மீட்டர் பொருத்தப்படாமலே அதற்க்கான மிசாரத்தை இலவசமாக வழங்குவதோடு அதன் மானிய தொகையை தமிழக அரசானது மின்சாரவாரியத்திற்கு செலுத்தி வருகிறது.

மீட்டர் பெட்டிகள் ஏதும் பொருத்தப்படாமலே மின்சாரத்தை விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு வழங்குவதால் பல்வேறு முறைக்கேடுகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை சரி செய்யவே, மீட்டர் பொருத்தப்படாத எந்தவொரு பிரிவிற்கும் மின்சார இணைப்பை வழங்கக்கூடாது என மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மேலும் மத்திய அரசானது மாநில அரசுக்கு புதிதாக ஓர் உத்தரவை அறிவித்துள்ளது. என்னவென்றால், இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை எந்த அளவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை துல்லியமாக கணக்கிடவேண்டும். மேலும் அதன் அடிப்படையிலே மட்டும்தான் மின்வாரியத்திற்கு மானியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here