அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நெட்வொர்க் நிறுவனம் எதுன்னு தெரியுமா? உடனே தெரிஞ்சுகோங்க…

முன்னதாக இந்தியாவில் ஏர்செல், வோடபோன் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் தான் முன்னணியில் இருந்தது. ஆனால், தற்பொழுது வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் இன்டர்நெட் சேவை மக்களுக்கு அதிகம் தேவைப்படுவதால் பல்வேறு நிறுவனங்கள் இந்த தொலைதொடர்பு சேவையை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், ஐடியா ஆகிய முன்னணி நெட்வொர்க் தொலைதொடர்புகள் இயங்கி வருகின்றனர். இந்நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள பல்வேறு புதுபுது ஆஃபர்களை வழங்கி வருகிறது.

Do you know which network company has the most customers Find out now read it immediately

இந்நிலையில், மக்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்காக ஜியோ 43,63,09,270 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தப்படியாக ஏர்டெல் 37,23,15,782 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM