இந்த ஆண்டு மட்டும் அதிகம் ஆர்டர் செய்த உணவு எதுன்னு தெரியுமா? ஸ்விகி வெளியிட்ட தகவல்..!

0
50

ஒவ்வோரு ஆண்டும் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (Swiggy), மக்கள் தங்களிடம் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பற்றிய தகவல்களை வெளியிடும். அந்த வகையில் இந்த 2022-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளைப் பற்றிய தகவல்களை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 -ல் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரு வினாடிக்கு 2.28 பிரியாணி ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு நிமிடத்துக்கும் பிரியாணிக்காக 137 ஆர்டர்களை வழங்கியுள்ளதாகவும் ஸ்விக்கி கூறியுள்ளது. அதிகம் விற்பனையான உணவு வரிசையில், பிரியாணி தொடர்ந்து ஏழுமுறை முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2022 -ம் ஆண்டில் பிளாட்ஃபார்ம் உணவகங்களிலிருந்து இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்ததையும் முக்கியமாக குறிப்பிட்டுள்ளது.

ஸ்விக்கி அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்: சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃபிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆகிய உணவுவகைகளுடன், இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமன் மற்றும் சுஷி போன்ற உணவுகளை ஆர்டர் செய்ததாகவும் கூறியுள்ளது.

மேலும் இந்திய உணவைத் தவிர வெளிநாட்டு உணவுவகைகளையே அதிகம் விரும்பி வாங்கியுள்ளது வியப்பாக உள்ளது என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. அதில், இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமென் போன்ற வெளிநாட்டு உணவுகளை விரும்பி வாங்குகின்றனர். இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில் சமோசா மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here