ரேஷன் அட்டை இருக்கா உங்ககிட்ட? ஜனவரி 02 முதல் இது தராங்களாம்!

தமிழக பாரம்பரியத்தின் முக்கிய பண்டிகையாக தை மாதம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மாடு, கரும்பு, பொங்கல் ஆகியவைத்தான். ஆனால், தற்பொழுது அரசு வழங்கும் பொங்கல் பரிசு மற்றும் இலவச வேட்டி, சேலைகளும் சேர்த்து தான் நியாபகத்தில் வருகிறது. அந்த அளவிற்கு, தமிழக அரசு மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதனை பூர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தொடர்பான முக்கிய தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இவலச வேட்டி, சேலைகளை சிறந்த முறையில் தயாரிக்க முன் பணமாக ரூ.200 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்க அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த பணிகள் நிறைவடைந்த பின் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஜனவரி 2 ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் தெரிவித்தார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM