உங்க கிட்ட ரேஷன் கார்டு இருக்கா? செப்டம்பர் 30 தான் கடைசி நாளாம்! உடனே இத பண்ணிடுங்க…

இந்நிலையில், தற்பொழுது மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் அனைத்து விதமான முக்கிய ஆவணகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் கார்டும் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 ஆம் தேதி வரை காலாவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்பொழுது செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறையின் மூலம் இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆப்லைன் முறையில் ஆதார் எண்ணை இணைக்க அருகில் உள்ள அரசு அலுவலகத்திற்கு சென்று இணைக்கலாம். அதுவே, ஆன்லைன் முறையில் இணைக்க கீழ்கானும் படிகளை பின்பற்ற வேண்டும்.

  • முதலில் மாநிலத்தின் பொது விநியோக அமைப்பு போர்ட்டலைத் திறக்க வேண்டும். அதில், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைப்புக்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், ரேஷன் கார்டு எண், ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிடவும். அதன்பிறகு, அந்த மொபல் நம்பருக்கு ஒரு OTP வரும் அதனை உள்ளிட்டவும். அதன்பின், ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைந்துவிடும்.

LATEST POSTS IN VALAIYITHAL.COM