அதிகாலையில் தலைவலியா? காரணங்களும், தீர்வுகளும்…

0
124

HEALTH TIPS IN TAMIL:

நம்மில் சிலருக்கு காலையில் படுக்கையிலிருந்து எழும் பொழுதே தலைவலியை உணர்வோம். மேலும், இது அன்றைய நாளையே முழுதாக வீணடித்து விடும். இதை சரி செய்யயாமல் சாதாரணமாக பலரும் நினைக்கிறார்கள். அதற்கான காரணங்களை அறிந்து தீர்வு காண்பது முக்கியமானதாகும். தலைவலி ஏற்பட மன அழுத்தம், நீர் சத்து பற்றாக்குறை, உணவில் சரியான ஊட்டசத்துயின்மை, உறக்கமின்மை போன்ற பற்பல காரணங்களும் இருக்கலாம்.

அதிகாலையில் தலைவலி ஏற்பட முக்கிய காரணங்களுள் சில

1. இரத்த சோகை:

இரத்த சோகை
  • நமது உடலில் இரத்த சிவப்பணு குறைவாக இருந்தால் (ஹீமோகுளோபின் குறைவதால்) காலையில் தலைவலி ஏற்படும்.
  • மேலும், உடலினுள் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால் தலைவலியுடன் கூடிய சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை ஏற்படலாம்.
  • எழுந்தவுடன் அடிக்கடி தலைவலி ஏற்படுமானால், நீங்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

2. சர்க்கரை அளவு

சர்க்கரை அளவு
  • நமது உடலில் சர்க்கரை அளவு அசாதாரணமாக இருந்தாலும் தலைவலி ஏற்படும்.
  • சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து, அதனை சரி செய்வதன் மூலமும், ஆரோக்கியமான உணவுகள் மூலமும் தலைவலியை கட்டுப்படுத்தலாம்.

3. நீரிழப்பு

நீரிழப்பு
  • தண்ணீரின் அளவு நமது உடலில் குறைவாக இருந்தாலும் தலைவலி வரக்கூடும்.
  • குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவராக இருந்தால், முதலில் அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

4. தூக்கமின்மை

தூக்கமின்மை
  • சரியாக உறங்காமல் இருந்தாலும் தலைவலி ஏற்படும்.
  • ஒரு மனிதனுக்கு சராசரியான உறக்கம் என்பது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் மிகவும் அவசியமானது.
  • நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் காலையில் எழும்போது தலைவலியை உணரமுடியும்.

அதிகாலையில் தலைவலி வரும்போது செய்ய வேண்டியவை:-

  • வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீரை அருந்தலாம்.
  • குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்த கூடாது.
  • சாதாரண நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம்.
  • எழுந்ததும் அதிகபடியான நீரை ஒரே நேரத்தில் குடிப்பதை தவிருங்கள்.
  • காலை எழுந்த உடன், சாப்பிடும் முன், தாகம் ஏற்படும் பொழுது என சரியான இடைவெளியுடன் நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீரை அருந்துதல் நம் உடலுக்கு நன்மை தரும்.

ALSO READ> சிறுதானிய வகைகள் மற்றும் பயன்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here