உங்ககிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? எப்போ? எப்படின்னு மாத்தணும்னு தெரியுமா? முழு விவரம் உள்ளே…!

0
10
உங்ககிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கா

நம்முடைய வாழ்க்கையில் பணம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒரு பொருளை வாங்குவதற்கும் சரி, ஒரு செயலை செய்வதற்கும் சரி எல்லாவற்றிக்கும் பணம் தான் தேவைப்படுகிறது. இந்நிலையில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது எனவும், அதனை திரும்ப வாங்குவதாக கடந்த வாரம் ரிசர்வ் வங்கியானது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் தங்களுடைய வங்கியில் சென்று மாற்றி கொள்ளலாம். மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை RBI வங்கி வெளியிட்டுள்ளது. அதன் படி 2000 ரூபாய் நோட்டுகளை நாளை (மே 23) முதல் மாற்றிகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், உங்களுடைய 2000 ரூபாய் நோட்டுகளை உங்களுடைய வங்கி கணக்குகளில் செலுத்தலாம் இல்லையென்றல் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறையாகவும் வாங்கி கொள்ளலாம். அதே போல ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளருக்கு சுத்தமான குடிநீர், இருக்கைகள் போன்ற வசதிகளை செய்ய வேண்டும் எனவும், தினமும் எவ்வளவு ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது என முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here