ஆன்லைன்ல உணவு வாங்குறீங்களா நீங்க? வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த ஷாக்!

0
26
Today News in Tamil

முன்பெல்லாம் நாம் விரும்பிய உணவை நாம் விரும்பியபடியே வீட்டிலே சுத்தமாக சமைத்து சாப்பிடுவோம். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் வாழ்க்கை சுழற்சி முறையை மாற்றிக்கொள்கிறோம். இப்போதெல்லாம் விரும்பிய உணவை விரும்பிய நேரத்தில் சாப்பிடுகிறோம். காரணம், இப்போ இருக்கும் காலக்கட்டத்தில் உணவானது நம்மை தேடி வருகிறது ஆர்டரின் பேரில்.

பெரும்பாலான மக்கள் உணவை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் ஆன்லைனில் வாங்கி சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். மேலும் உணவானது இலவசமாக டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.

சென்னையில் உள்ள ஆன்லைன் டெலிவரி நிருவனங்களுக்கு ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் செலுத்தக்கூடிய சந்தாவும், உணவு டெலிவரிக்கான கட்டணமும் 50% ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்ந்திருக்கிறது.

உதாரணத்திற்கு, ஒரு சிக்கன் பிரியாணியை உணவகத்துகே சென்று சாப்பிடும் போது, அந்த பிரியாணியின் விலை 150 முதல் 250 ரூபாயாக இருக்கும். ஆனால் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடும் சந்தா இல்லாத வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

சராசரியாக சென்னையிலே உணவை ஆன்லைன்ல ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.2,200 ஆண்டு சந்தாவாக கட்டுகிறார்கள். இந்நிலையில் இது மேலும் அதிகரித்துள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here