நீங்களும் மெட்ரோ ரயில்ல போகும்போது போன் எடுத்துட்டு போறீங்களா..? அப்போ மெட்ரோ அறிவித்த புதிய அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் என்பதாலும் வெளியில் செல்லும் மக்கள் சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ளவும் மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியது. மெட்ரோ ரயில் சேவை மூலம் பொதுமக்கள் பாதுக்காப்புடனும் சிரமம் இன்றியும் பயன்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ நிர்வாகம் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை மேலும் விரிவாக்க உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், இதற்கான இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட பணியில் ஓட்டுனர் இல்லா ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் ஏஐ தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இந்த மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்பொழுது மெட்ரோ நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக ஏற்கனவே இயங்கி வரும் மெட்ரோவில் புதிய வசதியை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. அதன்படி, மெட்ரோவில் மொபைல்களை சார்ஜிங் செய்யக்கூடிய வசதி இல்லாததால் விரைவில் மெட்ரோவில் சார்ஜ் போடும் வசதி கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM