நீங்களும் zomatoல சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்றீங்களா..? இனிமே ரூ.2 கூடுதலா கொடுக்கணுமாம்!

இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் கடைக்கு சென்று அங்கு நீண்ட நேரம் நின்று ஒரு பொருளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இந்த விஞ்ஞான உலகில் அனைத்தும் வேலைகளையும் எளிமையாக செய்து முடிக்கும் வகையில் புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்புதான் உணவு டெலிவரி செய்யும் செயலி. நாம் ஏதாவது சாப்பிட நினைத்தால் அதனை ஹோட்டலில் சென்று வாங்க வேண்டி இருக்கும். ஆனால் தற்பொழுது உணவு ஆர்டர் செயலியில் நாம் வேண்டிய உணவை ஆர்டர் செய்தால் போதும் நாம் இருக்கும் இடத்திற்கே வந்துவிடும். இந்த உணவு ஆர்டர் செயலியில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில், முன்னணி நிறுவனமாக zomato நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், zomato நிறுவனம் தனது பயனாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் கட்டணமாக ரூ.2 வசூலிக்கும் முறையை அமல்ப்படுத்தி வருகிறது. இந்த புதிய முறையானது தற்பொழுது சோதனை அடிப்படையில் சில பயனர்களுக்கு மட்டும் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அனைத்து பயனாளர்களுக்கும் விரிவுப்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.


LATEST POSTS IN VALAIYITHAL.COM