நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவான வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் மாதம் மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் கோடிகணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாகவே ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் குறித்தும் ரேஷன் அரிசி, ரேஷன் கடை ஊழியர்கள் குறித்தும் பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இனி பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலம் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் துவங்கப்பட்டுள்ளது. இதில் சிலரின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இந்த செரிவூட்டப்பட்ட அரிசியை எச்சரிக்கை வாசகங்களுடன் மட்டுமே மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு! பட்டதாரிகள் அனைவரும் அப்ளை பண்ணலாம்…!
- JIPMER புதுச்சேரியில் 10th, 12th, Diploma, M.Sc, MBBS படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 41300 மாச சம்பளமா வாங்கிடலாம்…!
- மாதம் 31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசாங்க வேலை! விருப்பமுள்ளவங்க வாக்-இன் இன்டர்வியூக்கு செல்ல ரெடி ஆகுங்க…!
- UPSC யில் வேலை செய்ய ஆர்வமா இருக்கீங்களா? இந்தியாவில் எந்த பகுதியிலும் வேலை பார்க்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!
- IRCON நிறுவனத்தில் மாதம் ரூ.218200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உங்க ஈமெயில் அட்ரஸ்ல சுலபமா விண்ணப்பிக்கலாம்…!