ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம்! பாஜக தேர்தல் அறிக்கை!

0
16
Latest News Today 2023

சட்டமன்ற தேர்தல் கர்நாடகாவில் வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி இவை இரண்டும் போட்டிப்போட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். மேலும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.

பா.ஜ.க கட்சியானது கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தலில் பல தோல்விகளை கண்டாலும், இமாசல் பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி, அக்கட்சிக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளது.

கர்நாடக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் உணவகம், தினமும் அரை லிட்டர் பால் இலவசமாக விநியோகம் செய்யப்படும் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்தனர்.

ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு இலவசமாக வழங்கப்படும். பட்டியல் இனத்தவர்களுக்கு 5 ஆண்டுக்கு ரூ.10000 நிரந்தர வைப்பு தொகை வழங்கப்படும். வீடு இல்லாத ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள். ஆயிரம் கோடி ரூபாய் பழமையான கோயில்களை புனரமைக்க ஒதுக்கீடு செய்யப்படும். சட்டவிரோத குடியேறிகளை களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். மேலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் எனவும், அதோடு பயங்கரவாதம் மற்றும் மத அடிப்படைவாதத்தை தடுப்பதற்காக காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெர்வித்துள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here