இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமனம் – திமுக அறிவிப்பு

0
49

தி.மு.க கட்சியின் எம்.எல்.ஏவாக உதயநிதி ஸ்டாலின் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முதலாக பதவி ஏற்றார். இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் – துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் தொடர்பாக தி.மு.க தலைமை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க தலைமை வெளியிட்ட அறிவிப்பில், இளைஞரணி செயலாளராக மீண்டும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல், ந.ரகுபதி என்கிற இன்பா, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, திமுகவின் மாநில மகளிர் அணி தலைவராக இருந்த கனிமொழி எம்.பி, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வகிந்து வந்த மாநில மகளிர் அணி தலைவர் பதவி விஜயா தாயன்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணைச் செயலாளராக விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மகளிர் அணி துணை செயலாளர்கள், மகளிர் தொண்டர் அணி செயலாளர், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் , மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்கள், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்கள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி ஆலோசனைக் குழு ஆகிய பொறுப்புகளிலும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை டுவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here