தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம்..! விவசாயிகள் சங்கத்தினரின் முக்கிய கோரிக்கை!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய்யும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மாதம் மாதம் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பாமாயில் எண்ணெய் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியதாக உள்ளது என்று பொதுமக்கள் பலரும் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட எண்ணெய் வகைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து அதனை ரேஷன் கடைகள் மூலம் மானிய விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயியால் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட எண்ணெய் வகைகளை விற்பனை செய்யுமாறு தமிழக விவசாயிகள் சந்ததினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த எண்ணெய் வகைகளை ரேஷன் கடைகளில் வழங்குவதால் மக்களிடையே அதிக வரவேற்பபை பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM