தக்காளி விலைதான் இப்படி ஏறுதுன்னு பாத்தா… இந்த பொருளின் விலையும் ஏறிடிச்சா..! அதுவும் எவ்வளவு தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் தங்கம் விக்கிற விலைக்கு தங்கம் தான் வாங்க முடியாதுன்னு பாத்தா தக்காளி கூட வாங்க முடியாது போல. அந்த அளவிற்கு தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. தக்காளி தான் இப்படி விலை ஏறிட்டே போகுதுன்னு பாத்தா மற்ற காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத விலை ஏற்றம் ஏழை, எளிய மற்றும் பாமரமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ.30 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒருகிலோ தக்காளி ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், சின்ன வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 220 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சியளித்தது.

இந்நிலையில், தக்காளியை போலவே இஞ்சி, பூண்டு, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் பலமடங்கு பயர்ந்துள்ளது. அந்த வரிசையில், தற்பொழுது அரிசியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசிக்கு 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதால் 26 கிலோ மூட்டை 1,400 ரூபாயிலிருந்து 1,600 ஆக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.

Did you see that the price of tomatoes is going up like this Do you know how much that is read it now

LATEST POSTS IN VALAIYITHAL.COM