2000 ரூபாய் நோட்டுகளை டெப்பாசிட் பன்றீங்களா? அப்போ கண்டிப்பா இது வேணும்! ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு!

0
13
Did you deposit 2000 rupee notes

கடந்த 19ஆம் தேதி அன்று புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கியானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, 2000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என கூறியுள்ளது.

இத்தகைய அறிவிப்புக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் முதல் முறையாக நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது..

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு என்பது, நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு அங்கம் தான். நமது நாணய மேலாண்மை நடவடிக்கை மிக வலுவானதாகும்.

இந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதால், பொருளாதாரத்தில் உண்டாகக்கூடிய பாதிப்பு மிக மிக குறைவு. மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் கருவூலத்துக்கு வந்து விடும் என்று கருதுகிறோம்.

இந்நிலையில், வங்கி கணக்கில் 50000 ரூபாய் அல்லது அதற்கு மேல் டெப்பாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் வேண்டும். இதில், 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, 50000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்த பண புழக்கமானது நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here