எப்பயாவது சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேணும்னு விஜய் கேட்டாரா? ரசிகர்களிடம் பேசிய லாரன்ஸ்…!

Today Cinema News 2023

Today Cinema News 2023

‘சூப்பர் ஸ்டார்’ யார்? என்பதில் கதாநாயகர்களின் ரசிகர்கள் தொடர்ந்து வலைதளத்தில் மோதி வருகிறார்கள். பி.வாசு இயக்கத்தில் உருவான ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடிக்கிறார், இவர்களுடன் ராகவா லாரன்ஸ், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், வடிவேலு , ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரைலர் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதில் கலந்துகொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், ” சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்வி இன்றும் ரசிகர்களிடையே ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நடிகர்களிடையே எந்த ஒரு பிரிவினையும் இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டு இருகின்றனர். விஜய் எப்பொழுதாவது ‘சூப்பர்ஸ்டார்’ பட்டம் தனக்கு வேண்டும் என்று கூறி இருக்கிறாரா ?

Also Read>> சனாதனம் பத்தி நான் பேசனது சரி தான்! இனிமேலும் பேசுவேன்! நச்சுனு பதலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!

அவர், என்னை எப்பொழுது நேரில் சந்தித்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலமுடன் இருகிறார்களா? என்று தான் முதலில் நலம் விசாரிப்பார் என கூறினார்’. விஜய், ரஜினி மீது மரியாதை வைத்து இருக்கிறார். சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த போது ‘பீஸ்ட்’ திரைப்படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்றும் வசூல் நன்றாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். இருவருக்குமிடையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

இங்கு அனைவரும் அண்ணன் தம்பிகளாக இருகின்ற நிலையில், சிலர் ‘தேங்காய் மரத்தில் மாங்காய் காய்க்கிறது’ என சொல்லி இவர்களை பிரிக்கிறார்கள் என்று ராகவா லாரன்ஸ் கூறினார். திரையுலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் போல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற நிலையில், தங்களை பிரித்து விடாதிர்கள்” என்றும் அவர் கூறினார்.