டாப் 10 பிரபலங்களில் முதலிடம் பிடித்த தனுஷ்..! இணையத்தில் வைரல்!

0
55

திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்த ஆண்டு வாத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தையே கையில் வைத்திருக்கும் தனுஷ் அவர்கள் ஐ எம் டி பி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் “முதல் 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் 2022” என்ற கணக்கெடுப்பில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதனுடைய பட்டியல் இணையத்தில் வெளியாகி தனுஷ் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தனுஷ். இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அடுத்து தனுஷ் சின் சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் ஹிட் அடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்பொழுது இந்த ஆண்டிற்கான டாப் 10 பிரபலமான இந்திய நட்சத்திர பட்டியலில் நடிகர் தனுஷ் முதனிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் பொலிவுட் நடிகை ஆலியா பட்டும், மூன்றாம் இடத்தில் ஐஸ்வர்யா ராயும் இடம்பிடித்துள்ளனர். மேலும், இந்திய அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எஃப் படத்தின் நாயகன் யஷ் இந்த பட்டியலில் 10-வது இடத்தை பெற்றுள்ளார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here