கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்த்க்கு பாட்டு பாடி அஞ்சலி செலுத்திய தனுஷ்

தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறப்புக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான படம் தான் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆவார். மேலும் சில பிரபலங்களும் இந்த கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளனர். பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கோக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12 அன்றைக்கு கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீசாக உள்ளது.

ALSO READ : விஜய் நடிக்கும் GOAT படத்தின் ஸ்டோரியை வெங்கட்பிரபு வெளியிட்டார்! மிரட்ட வரும் ஏலியன்ஸ்!

இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளால் உருவான இந்த படம் பீரியட் டிராமாவாக இருக்கும். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படம் 1930 முதல் 40 காலகட்டத்தில் நடக்கும் கதையாகவும், தனிமனித சுதந்திரத்தை மையமாகவும் கொண்ட கதையாகவும் இருக்கும் என்று கூறினார். இந்த படத்தில் தனுஷ் ஒரு சாதாரண மனிதனாக இருந்து எப்படி போராளியாக மாறுகிறார் என்ற கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜிவி பிரகாஷ், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பு மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு ரசிகர்களின் முன்னிலையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக விஜயகாந்த் மறைவுக்கு தனுஷ் வரவில்லை என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. தனுஷின் அக்கா மருத்துவ படிப்பிற்கு உதவியவர் விஜயகாந்த் தான் என பேட்டிகளில் கஸ்தூரி ராஜா அடிக்கடி கூறியுள்ளார். அப்படி உதவி செய்த விஜயகாந்த் அவர்களின் இறுதி அஞ்சலிக்கு செல்லவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது மேடை ஏறிய தனுஷ் விஜயகாந்த்காக ராசாவே உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது என்ற பாடலை பாடியது நெகிழ்ச்சியாக இருந்தது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top