போலீசாரிடமே அபராதம் வசூலித்த டி.ஜி.பி! இதுதான் காரணமா?

0
42

கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இருசக்கர வாகன ஓட்டிகளும் மாறும் அவர்களுடன் பயணிப்பவர் ஆகிய இருவரும் ஹெல்மெட் அணியவது காட்டயமக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நடைமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்படுகிறது. இனி ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நடைமுறை அரசு அதிகாரிகளும் மற்றும் போலீசாரும் கடைபிப்பதில்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றசாற்று வைத்தனர். அதன்படி, இருசக்கர வாகன ஓட்டும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியா விட்டால் அவர்களுக்கும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று வாக்கி டாக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பல போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஒட்டி வருவதை பார்த்த டி.ஜி.பி, மனோஜ்குமார் லால், ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று போலீஸ் தலைமை செயலகத்திற்கு ஹெல்மெட் அணியாமல் வந்த 10 -க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. டி.ஜி.பி.,மனோஜ்குமார் லாலின் இந்த செயல் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here