மீண்டும் மிரட்ட வரும் ‘டிமான்ட்டி காலனி 2’ | புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!

Tamil Cinema Seithikal 2023

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிமான்ட்டி காலனி’ என்ற படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறன் இதன் இரண்டாம் பாகம் ‘டிமான்ட்டி காலனி -2’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இதில் அருள் நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி -2’ படத்தில் புதிய அறிவிப்பு ஒன்ற படக்குழு அறிவித்தது. அதாவது இந்த படத்தோட பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை (03.08.2023) மாலை 5.01 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்தது. மேலும், செப்டம்பர் மாதத்தில் ‘டிமான்ட்டி காலனி -2’ திரையரங்குகளில் ரீலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM