World News Today 2023
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஜெப் இல்க். அவருடைய மனைவி அமலியா ரெயின்வில்லே. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திடீரென இவர்கள் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரையில் பலத்த சத்தத்தோடு பனிக்கட்டி ஒன்று விழுந்தது. இதனால் மேற்கூரையில் பெரிய ஓட்டை ஏற்ப்பட்டது. இந்த சத்தத்தை கேட்ட தம்பதியனர் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தனர். அதில், இவர்கள் வீட்டின் மீது பெரிய பனிக்கட்டி ஒன்று விழுந்துள்ளது தெரிய வந்தது.
7.5 முதல் 10 கிலோ எடை கொண்ட அந்த பனிக்கட்டி துண்டு விழுந்ததில் வீட்டின் மேல் பகுதியில் மட்டும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்ப்படவில்லை என நியூயார்க் போஸ்ட் தெரிவிக்கின்றது.
இது குறித்து இலக் கூறியபோது, இதுவரை இப்படியொரு கேட்டிராத சத்தம் போல் இருந்தது. இது என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் வானத்தில் மேகமும் சூழ்ந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த பனிக்கட்டி விழுந்ததில் சுமார் 2 அடி விட்டத்திற்கு வீட்டின் மேல் கூரையில் ஓட்டை ஏற்ப்பட்டது. இதனால் வீட்டின் உள்ளே அதிகம் சேதம் அடைந்துள்ளது. சுமார் 5 கிலோ எடையுள்ள பனிக்கட்டி துண்டுகளை ஒரு பையில் சேகரித்துள்ளோம். இன்னும் நிறைய பனிக்கட்டிகள் சிதறி கிடக்கின்றன.
இந்த பனிக்கட்டி துண்டுகள், போஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற ஒரு விமானத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என அந்த தம்பதியினர் நம்புகிறார்கள். மேலும், மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- தனியார் வேலையில் விருப்பமுள்ளவரா நீங்க? இந்த வாய்ப்பு உங்களுக்காகவே! சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க ப்ரண்ட்ஸ்..!
- உடனே அப்ளை பண்ணுங்க! அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை தராங்களாம்! Diploma, Any Degree படிச்ச எல்லாருமே அப்ளை பண்ணலாம்!
- ரூ.23,500 சம்பளத்துல மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு..! அப்ளை பண்ண நீங்க ரெடியா இருக்கீங்களா?
- ஆரம்ப சம்பளமே 44 ஆயிரம் ரூபா! அட்டகாசமான வேலை வாய்ப்பை வெளியிட்டுள்ளது BECIL நிறுவனம்!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் 1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்! VOC துறைமுக அறக்கட்டளையில் வேலை!