உங்க லவ்வர்… உங்களை அதிகமா லவ் பண்ணனுமா? ஃபர்ஸ்ட் இத செய்ங்க..! Cute Love Tips in Tamil

0
143

காதலிப்பதே ஒரு விதமான சுகம் தான். அதனை முழுமையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் காதலின் உண்மையான அர்த்தம். காதலின் உணர்வை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால் நீங்கள் இன்னும் காதலிப்பதில் முழுமை பெறவில்லை என்றே அர்த்தம். இருவருக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு இருந்தாலே பாதிக்கும் மேற்பட்ட பிரச்சினைகள் வாழ்வில் தீர்ந்துவிடும். காதலிக்கும் பொழுது அல்லது உங்கள் இருவருக்கிடையில் ஒரு வித அன்பை எப்பொழுதுமே அதிகரித்துக் கொண்டே இருங்கள்…

1. துணையின் பேச்சை கவனியுங்கள்

துணையின் பேச்சை கவனியுங்கள்

உங்களின் மேல் அன்பு அதிகரிக்க நீங்கள் பேச வேண்டுமென்ற அவசியம் இல்லை. அவர்களின் பேசத் தொடங்கியதில் இருந்து முடிக்கும் வரை பொறுமையாக கேட்டாலே போதுமானது. அவர்களுக்கு அந்த நேரம் நிம்மதியும், சந்தோசமும் ஏற்படும்.

நீங்கள் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் சொல்லும் வாரத்தைகளை கவனமாக கேட்பதால், உங்களின் மேல் அவர்களுக்கு மாறாத நம்பிக்கை உண்டாகும். மேலும், அவர்கள் பேசும்பொழுது நீங்கள் அவர்களின் கண்களை பார்க்க வேண்டும். இப்படி செய்வதால், உங்களின் மேல் ஈர்ப்புடன் சேர்ந்து அன்பும் அவர்களுக்கு அதிகரித்திடக் கூடும். இது உங்கள் இருவருக்கிடையேயான காதல் உறவை பலப்படுத்தும்.

2. மனநிலையை அறிந்து ரொமான்ஸ் செய்யுங்கள்

மனநிலையை அறிந்து ரொமான்ஸ் செய்யுங்கள்

எப்போதுமே, நீங்கள் உங்கள் துணையின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவது மிகவும் உகந்தது.

உங்கள் துணையிடம் ஆசையாகவும், அன்பாகவும் கொஞ்சம் ரொமான்ஸாக பேச வேண்டும் என்பது உங்களின் மனநிலையாக இருந்தாலும், அதே மனநிலையில் அவர்களும் அப்போது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அது அப்போது உங்களின் துணைக்கு பிடிக்கிறதா? அவரின் அப்போதைய மனநிலை என்ன? என்பதையெல்லாம் நன்கு அறிந்து, அதன் பிறகு உங்களின் மனதில் உள்ள காதலை ரொமான்ஸாக வெளிபடுத்துவது நல்லது.

4. எப்போதும் துணையாக இருங்கள்

எப்போதும் துணையாக இருங்கள்

எப்போதும் உங்கள் துணை உங்களுடன் மட்டுமே நேரம் செலவிட வேண்டும் என்று எண்ணுவது மிகவும் தவறானது. ஏனெனில் உங்களை போலவே அவர்களுக்கும் தனி சுதந்திரம் உள்ளது. அவர்களின் விருப்பதை பூர்த்தி செய்துகொள்ள அவர்களுக்கு உரிமையும் உள்ளது. இதனை நீங்கள் நன்கு புரிந்து கொண்டால் உங்களின் துணை எப்போதும் உங்கள் வசமே…

அவர்கள் உங்களின் துணையாக இருந்தாலுமே அவர்களுக்கும் தனிப்பட்ட ஆசைகளும், கனவுகளும் இருக்கக்கூடும். அதை முதலில் என்னவென்று நீங்கள் தெரிந்து கொண்டு, அதனை அவர்கள் அடைய நீங்கள் எப்போதும் துணையாக இருந்தாலே போதும். அவர்களின் அன்பு உங்களின் மேல் எண்ண முடியாத அளவிற்கு உயரும்.

5. சண்டைகளும் காதலை நெருக்கமாக்கும்:

சண்டைகளும் காதலை நெருக்கமாக்கும்

நீங்கள் உங்கள் துணையிடம் உங்களின் கருத்தைதான் ஏற்றுகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். காதலில், இருவருக்கும் சம உரிமை உண்டு. இருவருடைய கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டு… சிந்திக்கும் மனநிலை வேண்டும்.

ஒரு ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்ள எப்போதும் கருத்து வேறுபாடுகளும், சண்டைகளுமே தேவைப்படுகிறது. ஆம். இது உண்மை தான். எப்போதும் சண்டை போட்டு கொள்ளாமல் இருப்பவர்களை காட்டிலும் அதிகம் சண்டை போடுபவர்கள் தான் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். இது காதலில் மட்டுமல்லாமல் நட்பிற்கும் பொருந்தும்.

உண்மை என்னவென்றால், கருத்து வேறுபாட்டால் ஏற்படக்கூடிய சண்டைகளில் தான் உண்மையான அன்பை பார்க்க முடியும். “முதலில் சண்டை போடுவது நீயாக இருந்தாலும் உன்னை சமாதானப்படுத்துவது நானாக இருக்க வேண்டும்” என்பதே காதலின் உண்மையான வெளிப்பாடாகும். இது ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தும்.

6. காதல் துணையிடம் நட்பாக இருக்க முயலுங்கள்:

காதல் துணையிடம் நட்பாக இருக்க முயலுங்கள்

பெரும்பாலான உறவுகளில் புரிந்துணர்வு இல்லாமல் இருப்பதே பாதிக்கும் மேற்பட்ட பிரச்சினைக்கு காரணமாக இருக்கும். நல்ல புரிதல் இருந்தால், எந்த உறவுக்கும் ஆயுள் அதிகம்தான். பொதுவாக நண்பர்களிடத்தில் மட்டுமே நமக்கான சுதந்திரம் கிடைத்ததாக எண்ணி நமது எண்ணங்களை முழுமையாக பகிர்ந்து மகிழ்வோம். இந்த முறையை காதலிலும் பின்பற்றலாம்.

காதலிப்பவர்கள், பெரும்பாலும் நண்பர்களாக இருந்து அதன் பின்பே காதலை உணர்வார்கள். துணையை புரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல தொடக்கம் நட்பு தான். உண்மையான நட்பில் முழு சுதந்திரத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. நீங்கள் மனம் விட்டு பேச விரும்பும் ஒரு நபர் என்றால், அது நண்பர்காளாகவோ அல்லது நண்பனை போல பேசும் நபராகாத்தான் இருக்க முடியும். என்றும் நட்பிற்கு அழிவு இல்லை.

7. விட்டுக்கொடுப்பதால் காதல் அதிகரிக்கும்

விட்டுக்கொடுப்பதால் காதல் அதிகரிக்கும்

எப்போதும் உங்கள் துணையுடன், எந்த விஷயமாக இருந்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வதால், உங்கள் இருவரின் காதல் வாழ்வு மென்மேலும் நீடித்துக் கொண்டே செல்லும். உதாரணமாக, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது என்றால், ஒரு நிமிடம் பேசுவதை நிறுத்திவிட்டு ஒரே ஒரு முறை உங்கள் துணையின் நிலையில் இருந்து சிந்தித்து பாருங்கள்…

‘ஏன் இப்படி செய்ய வேண்டும்? அல்லது ஏன் என்னிடம் இப்படி பேச வேண்டும்?’ இது போன்ற உங்களின் கேள்விகளுக்கு அவர்களின் இடத்தில் இருந்து சிந்தியுங்கள். அப்போது உங்களுக்கே புரியும்.

எப்போதும், ஒரு பிரச்சனைக்கு முதலில் யார் காரணம் என்பதற்கு பதிலாக பிரச்சினையை முதலில் முடிக்க போவது யார் என்று சிந்தியுங்கள். இதுவே உங்கள் உறவின் ஆயுளை நீட்டிக்கும் தந்திரம்… முதலில் யார் விட்டுகொடுக்கிறார்களோ அவர்களின் மேல் நாட்கள் செல்ல செல்ல காதலும் அதிகரித்திடக் கூடும். இதில் பொறுத்தவரை பெரும்பாலும் பெண்களே வெற்றி பெற்று விடுகின்றனர்.

8. காதல் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சிதான்

காதல் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சிதான்

விட்டுக்கொடுப்பதும், மன்னிப்பு கேட்பதும் காதலில் மிகவும் அவசியமானது. ஏனெனில் பல காதல் திருமணங்களின் பிரிவிற்கு, இதுவும் முக்கிய காரணமாகிறது. புரிதல் இன்மையால் பல நேரங்களில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். இதனை தவிர்த்துவிட்டாலே…

காதல் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி தான். தனது துணையிடம் முதலில் மன்னிப்பு கேட்பவர்களுக்கு எப்போதும் அதிகப்படியான தைரியமும், தன்னம்பிக்கையும் இருக்கும். இதை அவர்கள் எந்த விதத்திலும் குறைவாகவோ தவறாகவோ எண்ண மாட்டார்கள். தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவே கருதுவர். இதனால், துணையிடம் எப்போதுமே அன்பாக இருங்கள்.


ALSO READ

பெண்களை காதலிக்க வைக்க 7 சிறந்த வழிகள்!.. Interesting Facts!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here