ரவீந்தர் சந்திரசேகரன் – மகாலட்சுமி திருமணம் & ரொமாண்டிக்..!

0
102

கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வலம் வரும் புதிய தம்பதிகள் தான் ரவீந்தர் சந்திரசேகரன் – மகாலட்சுமி. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து… அந்த காதல் இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் பற்றி எண்ணற்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. ரவீந்தர் சந்திரசேகரன் – மகாலட்சுமி திருமணம் பற்றி சுவாரஸ்யமான சில தகவல்களை காணலாம் வாங்க!

Ravindar Chandrasekaran Marriage

1. கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்கள்.

ரவீந்தர் சந்திரசேகரன் - மகாலட்சுமி

2. சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் தான் மகாலட்சுமி. 90’ஸ் கிட்ஸ் பலருக்கு கிரஷ்ஷாக இருந்தவர். பின்பு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மகாலட்சுமி

3. இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு முன்னதாகவே அனில் என்பவருடன் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பின்பு, கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். ரவீந்தரும் தனது மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார்.

ரவீந்தர் சந்திரசேகரன் - மகாலட்சுமி 1

4. இதற்கிடையில் தான் மகாலட்சுமி – ரவீந்தர் இருவரும் காதலித்து… தங்களுடைய காதலை திருமணத்தில் முடித்துள்ளனர். இவர்களுடைய திருமணம் பற்றிய செய்திகள் காட்டு தீயை போன்று வலைதளத்தில் பரவியது. இவர்களுடைய அழகான திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

ரவீந்தர் சந்திரசேகரன் - மகாலட்சுமி 2

5. இந்நிலையில் தான் இன்ஸ்டகிராமில், ”நீங்கள் என் இதயத்தை திருடிவிட்டீர்கள், ஆனால் நான் அதை நீங்களே வைத்திருக்க அனுமதிக்கிறேன்” என்று அறிவித்திருந்தார். அதற்கு, “நீ மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன்… அதை என்னுடையது என்று நா மாற்றிவிட்டேன்… வேகத்தை சரிபார்க்கவும் பொண்டாட்டி” என கமெண்ட் செய்திருக்கிறார் ரவீந்தர்.

ரவீந்தர் சந்திரசேகரன் - மகாலட்சுமி 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here