கண்ணாடி அணிய முக்கிய காரணமாக இருப்பது செல்போன், டிவி, லேப்டாப், டேப் போன்ற கண்ணுக்கு பாதிப்பினை ஏற்படக்கூடிய ஸ்க்ரீனுக்கு அனைவருமே அடிமையாகி இருப்பது தான். தம்முடைய அழகை மேம்படுத்திடவும், தோற்றத்தை மேலும் பளிச்சென்று காட்டவும் சில குறிப்பிட்ட நிறத்திலான காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துகின்றனர். காண்டாக்ட் லென்ஸ்கள் மீது அதிகப்படியான ஆர்வம் உடையவரா நீங்கள்… அப்படி என்றால், இது பதிவு உங்களுக்கானதுதான். காண்டாக்ட் லென்ஸ்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
1. கண்ணாடிக்கு பதிலாக தன்னம்பிக்கையை அதிகரிக்கும் காண்டாக்ட் லென்ஸ்கள்:

கண்களுக்கு தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காமல் இருப்பதால்தான் கண்களுக்கு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெரும்பானோர், கண்களுக்கு கண்ணாடி அணிவது தங்களது அழகை குறைத்து விடுவதாக கருதி, அதனை அணிவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் கண்ணாடிக்கு பதிலாக காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் காண்டாக்ட் லென்ஸ் என்பதை தனது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் கருவியாகவும் பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும் சிலர், வசதியாக இருக்கிறோம் என்பதை வெளிகாட்டுவதற்காக பயன்படுத்துகின்றனர்.
2. கண் பார்வை குறைபாட்டுக்கு வாழ்க்கை முறையும் ஒரு காரணம்:

இன்றைய காலக்கட்டத்தில் கண்களுக்கு கண்ணாடி அணியாதவர்கள் என்பது மிகவும் குறைவு தான். ஏனெனில், சிறு சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரையுமே தற்போது கண் பார்வை குறைபாடு என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு நாம் வாழும் வாழ்க்கை முறையும், வாழக்கூடிய சூழ்நிலையோடு உணவு பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாக அமைகிறது.
3. கண்களின் ஆளுமையான தோற்றத்திற்கு கலர்கலரான காண்டாக்ட் லென்ஸ்கள்:

முகத்தின் கவர்ச்சிகரமான தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பது கண்கள் தான். இதற்கு காஜல், மஸ்காரா, ஐ ஷேடோ, ஐலைனர் போன்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை போன்றே, ஆளுமையான தோற்றத்தை உருவாக்கி, கண்களின் வசீகரத்தை வெளிபடுத்திட கலர்கலரான காண்டாக்ட் லென்ஸ்களை அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
தற்போது உடைகளுக்கு பொருத்தமானதாக மட்டுமல்லாமல் 40-க்கும் மேற்பட்ட கலர்கலரான காண்டாக்ட் லென்சுகளை அவரவர் ஸ்டைலுக்கும் ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வருகிறனர்.
4. கிரே கலரில் உள்ள காண்டாக்ட் லென்ஸ்கள்:

நன்மை மற்றும் தீமைகளை பிளாக் மற்றும் ஒயிட் சுட்டிக்காட்ட பயன்படுவதைப் போன்றே, கிரே கலர் என்பது சமநிலையைச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறத்தில் காண்டாக்ட் லென்சுகளை அணிவதன் மூலமாக நுட்பமான தோற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மேலும், இதனை அணிவதால் தைரியமான உணர்வையும் உருவாக்கிட முடியும். தினசரி பயன்பாட்டிக்கு இந்த வகையான நிறத்தில் இருக்கும் காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தலாம்.
குறிப்பாக கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் மீட்டிங், பிரசன்டேஷன் போன்ற நிகழ்வுகளில் மட்டுமல்லாமல், வேலை செய்யும் இடங்கள் அல்லது வீடு என்று அனைத்து இடங்களிலும் கிரே கலர் காண்டாக்ட் லென்ஸினை பயன்படுத்துவதால், நமது தோற்றத்தை மேம்படுத்தி காட்ட முடியும்.
5. ஸ்கை ப்ளூ கலரில் உள்ள காண்டாக்ட் லென்ஸ்கள்:

பெரும்பாலும் வானத்தின் வர்ணத்தையும், கடலின் நிறத்தையும் எதிரொலிக்கும் விதமாக இருப்பது நீலநிறம் தான். பார்ப்பவரை கவர்ந்திழுக்க கூடியதாக இந்த நிறத்தில் இருக்கும் காண்டாக்ட் லென்ஸ்கள் காணபடுகிறது.
நாகரீகமான தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள அண்டர்டோன்களை உடைய நீல நிற காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தலாம்.
மேலும் தங்களது அமைதியான குணத்தை வெளிபடுத்துவதற்காகவும் வெளிர் நீல நிற காண்டாக்ட் லென்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிரில் இருப்பவரை கவர்ந்திழுக்கும் வகையில், கடல் அலைகளை நினைவு படுத்தக்கூடிய ஸ்கை ப்ளூ கலர் காண்டாக்ட் லென்களை டேட்டிங் செல்லும் போது பயன்படுத்தலாம்.
6. பராமரிப்பில்லாத காண்டாக்ட் லென்ஸினால் ஏற்படும் பாதிப்புகள்:

அதிகமாக காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவதால், கண்களிலுள்ள விழிப்படலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் விழித்திரையும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.
காண்டாக்ட் லென்ஸ்கள் மீது அழுக்கு மற்றும் தூசி படிவதாலும், கண்களில் பிரச்சனை ஏற்படும். இதனால் கண்கள் சிவந்து போதல், அரிப்பு ஏற்படுதல், கண்களில் வறட்சி உண்டாதல், கண்களில் நீர் வருதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் கண்களில் ஏற்படக் கூடும்.
7. கண்களை சுத்தமாகவும் பராமரிப்பாகவும் வைத்திருப்பது அவசியம்:

கலர் கலரான காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவதால், கண்களை அவ்வபோது பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக நீச்சல் பயிற்சியை காண்டாக்ட் லென்ஸை அணிந்து கொண்டு மேற்கொள்வதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.
கண்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வதோடு கண்களை பராமரிப்பதும் மிகவும் அவசியமானதாகும். காண்டாக்ட் லென்ஸினை, கண்களில் அதிக நேரம் அணிந்திருப்பதை நிச்சயமாக தவிர்த்துவிட வேண்டும். இதுதான், கண்களுக்கும் நல்லது.