இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு, காங்கிரஸ் MP ராகுல் காந்தி இரங்கல்!

0
92

“நீண்டகாலமாக ஆட்சி பீடத்தில் இருந்தவர் இரண்டாம் எலிசபெத்” – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல்

காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

தற்போது 96 வயதான இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர், மகாராணிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் சிகிச்சை பலனின்றி, உடல்நலகுறைவால் நேற்று உயிர் துறந்தார்.

பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ” நீண்டகாலாமாக ஆட்சி பீடத்தில் இருந்த இரண்டாம் எலிசபெத், தனது நாட்டுக்காக அர்பணிப்புடனும், கண்ணியத்துடனும் பணியாற்றி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தி, “இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், இங்கிலாந்து மக்களுக்கும் தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும்” கூறியுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here