மாஸ் ஹிட் அடிச்ச ரன்பீர் கபூரின் அனிமல் படம்! அடுத்த பாகம் எப்போ தெரியுமா?

மாஸ் ஹிட் அடிச்ச ரன்பீர் கபூரின் அனிமல் படம்! அடுத்த பாகம் எப்போ தெரியுமா?

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியில் வெளியான திரைப்படம் தான் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், அணில் கபூர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா சேர்ந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்தனர்.

இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமில்லை இந்த படம் சுமார் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் காட்டியது.

இந்த நிலையில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன் படி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டைரக்டர் சந்தீப் ரெட்டி வங்கா, அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் 2025 ஆம் ஆண்டில் தொடங்கும் எனவும் அதற்கு அனிமல் பார்க் என பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top