தியேட்டருக்கு நம்பி வாங்க… சந்தோசமா போங்க… அயலான் படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்…!

Sivakarthikeyan came to watch the movie Ayalan

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் அயலான். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படம் ஜனவரி 12-ந் தேதி (இன்று) அனைத்து தியேட்டர்களிலும் வெளியானது. இப்படத்தை காண சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள்.

இதற்கிடையில், அயலான் படத்தை ரசிகர்களுடன் பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் வெற்றி திரையங்கிற்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்…

இந்த அயலான் படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என நம்பிக்கை உள்ளது. தியேட்டர்களில் அனைவரும் சிரித்து ரசிக்ககூடிய படமாக தான் இருக்கும். ரசிகர்கள் எல்லோரும் நம்பி திரையரங்கம் வாருங்கள்… சந்தோசமாக செல்லுங்கள்… அதே போல திரும்பவும் வந்து பாருங்கள் என இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாதிரி சினிமா நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top