அயலான் படத்தின் டிரைலர் எப்போ? படக்குழு கொடுத்த நியூ அப்டேட்…!

Ayalan Movie Trailer Released Date Update

டைரக்டர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் தான் அயலான். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியிலே அயலான் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. எனவே பெரிதும் ஆவலுடன் இப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறனர். தமிழ் சினிமாவிலே சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் பல வெற்றி படங்களையும் தந்துள்ளார். இவர் நடித்த படங்களிலே இந்த அயலான் படம் தான் அதிகமான நாடுகளிலும் மற்றும் தியேட்டர்களிலும் வெளியாகும் திரைப்படம் என அயலான் படத்தின் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read >> உங்க ஈமெயிலின் வழியாவே அப்ளை பண்ணலாம் இந்த ஜிப்மர் வேலைக்கு! முழு விவரம் உள்ளே…

இத்திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகும் என அயலான் படக்குழு தெரிவித்திருந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடத்தது.

இந்நிலையில், படக்குழு அயலான் படத்தின் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது. அதில், வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதி அன்று படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top