சாக்லேட்பாய் மாதவனுக்கு கிடைத்த இப்படியொரு வாய்ப்பா..? வாழ்த்துக்களை கொட்டி குவிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 90’ஸ் களின் சாக்லேட் பாய் என்று போற்றப்பட்டவர் நடிகர் மாதவன். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படத்தின் மூலமே அதிக ரசிகர்களை தன்வசம் கட்டிபோடுவிட்டார். இவரை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. நடிகர் மாதவன் தமிழ் மட்டுமின்றி இந்தி திரைப்படங்களிலும் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

Chocolateboy Madhavan got such an opportunity Congratulatory fans read it now

அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற தேசிய விருதில் நடிகர் மாதவன் நடித்து இயக்கிய பாலிவுட் படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றார். திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாதவனுக்கு சோசியல் மீடியா மூலம் வாழ்த்துக்களை குவித்து வந்தனர். அந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கு ஒரு புதிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read : மாதம் 35000 சம்பளம் வாங்கனுமா? அப்போ IIT மெட்ராஸ் அறிவிச்ச வேலைக்கு உடனே அப்ளை பண்ணுங்க…!

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனமானது புனேவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக இருந்து வந்த நடிகர் சேகர் கபூருக்குப் பதிலாக அந்த இடத்தில் புதிய தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.