எக்ஸ்(டுவிட்டரில்) Profile யை மாற்றிய முதல்வர்..! என்ன Profile தெரியுமா?

தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அவற்றில் மிகவும் முக்கியமான திட்டமாக இருப்பது காலை உணவு திட்டம். முதற்கட்டமாக இந்த திட்டமானது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தொடங்கபட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Chief Minister who changed X (Twitter) profile Do you know what Profile is read it now

அதன்படி, காலை உணவு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள சுமார் 31,008 தொடக்க பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயனடைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில், காலை உணவு திட்டத்தால் என் மனம் நிறைந்து உள்ளதாகவும் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X(டுவிட்டர்) பக்கத்தில் உள்ள Profile Picture யை மாற்றி உள்ளார். அதில், திருக்குவளை பள்ளியில் மாணவியுடன் கலந்துரையாடியபடி உணவருந்தியவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM