முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதன்முறையாக தென்காசிக்கு ரயில் பயணம்! விஷயம் இதுதான்..!

0
38

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக தென்காசிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ரயிலில் பயணிக்க உள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு விமானம் மூலம் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், முதன்முறையாக தென்காசிக்கு ரயிலில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக இன்று இரவு 8.40 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளார்.

மேலும், நாளை குற்றாலத்தில் உள்ள அரசு மாளிகையில் ஓய்வெடுத்தபின் தென்காசிக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இத்தகைய நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு மீண்டும் விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல ஜஜி அஸ்ரா கார்க் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here