நம்ம சென்னை துறைமுகத்தில் வேலை! இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! ஜாப்ல சேருங்க!

Chennai Port Trust Recruitment 2024 | Walk-in Interview For Accountant, Physical Education Teacher, Physical Director

Chennai Port Trust

சென்னை துறைமுகத்தில் கணக்காளர், உடற்கல்வி ஆசிரியர், உடல் இயக்குனர் என்ற பணியிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளனர். ஆர்வம் உள்ள நபர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு இந்த வேலையில் ஈஸியாக ஜாயின் பண்ணிடலாம்.

சென்னை துறைமுகம் அறிவித்த இத்தகைய பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Com, B.P.Ed, Diploma, M.P.Ed ஆகிய படிப்பில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சிபெற்றரவராக இருக்க வேண்டும். இத்தகைய கல்வித்தகுதி உடையவர்களே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் சம்பளம், விண்ணப்பிக்கும் கடைசி நாள், வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கீழே கொடுத்துள்ளோம். தொடர்ந்து வாசியுங்கள்.

சென்னை துறைமுகம் தற்போது கணக்காளர், உடற்கல்வி ஆசிரியர், உடல் இயக்குனர் இந்த பணிக்கு 03 காலியிடத்தை நிரப்ப தான் ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. இதில் உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு 01 காலியிடமும், கணக்காளர் பதவிக்கு 01 காலியிடமும், உடல் இயக்குனர் பதவிக்கு 01 காலியிடம் என மொத்தம் 03 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த ஜாப்க்கு ஜாயின் பண்ண விரும்பினால் உங்களுடைய வயது அதிகபட்சம் 45 வயதாவது இருக்க வேண்டும்.

Also Read >> NIT திருச்சியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலைவாய்ப்பு | ஈஸியா இமெயிலில் விண்ணப்பியுங்க…!

நேர்காணல் அடிப்படையில் சென்னை துறைமுகம் அறிவித்த Accountant, Physical Education Teacher, Physical Director பதவிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய இருக்கிறது. இப்படியாக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000 முதல் ரூ.25,000 வரைக்கும் தரப்படும். மேலும், தேர்வாகும் நபர்கள் நம்ம சென்னை மாநகரிலே வேலை செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பிழையில்லாமல் நிரப்பவும். அதனுடன் கல்வித்தகுதி மற்றும் சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு January 30, 2024 என்ற தேதியில் நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூக்கு வரவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்

New Conference Hall,
Ground Floor,
Centenary Building,
Chennai Port Authority,
NO: 1 Rajaji Salai,
Chennai-600001.

கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள சென்னை துறைமுகம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான Chennai Port Trust Recruitment 2024 Notification & Application Form ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top