நிலவை நெருங்க உள்ள சந்திராயன் 3 விண்கலம்… சற்றுமுன் இஸ்ரோ வெளியிட்ட புதிய அப்டேட்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 3 என்ற விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் மெல்ல மெல்ல அதன் சுற்றுவட்ட பாதையை சுற்ற தொடங்கியது. சந்திராயன் 3 விண்கலம் ஒவ்வொரு சுற்றுப் பாதையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலம் தற்பொழுது எந்த சுற்றுவட்ட பாதையில் உள்ளது என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்திராயன் 3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர ஆரம்பித்து உள்ளது. சந்திராயன் விண்கலமானது நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டுள்ளது. இதனை அடுத்து சந்திராயன் 3 ஆகஸ்ட் 5 ஆம் தேதி சந்திர சுற்றுப்பாதை முழுதாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Chandrayaan 3 spacecraft nearing the moon New update released by ISRO just now see here

இந்த முயற்சிகள் வெற்றிபெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன் 3 லேண்டரை மென்மையாக தரையிறக்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM