ரசிகர்களை மிரளவைக்கப் போகும் சந்திரமுகி 2… சற்றுமுன் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தான் “சந்திரமுகி”. இந்த படம் பி.வாசு இயக்கத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.

இந்நிலையில், தற்பொழுது சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்‌ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், “சந்திரமுகி 2” படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி(விநாயகர் சதுர்த்தி) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Chandramukhi 2 is going to scare the fans the latest update released just now watch here

இதையடுத்து, சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் இன்று(ஆகஸ்ட் 25) சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM