மத்திய அரசின் புதிய நடவடிக்கை… தமிழ்நாட்டில் அரிசியின் விலை மீண்டும் குறைவு..! எவ்வளவு தெரியுமா?

கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பல இடங்களில் தக்காளியின் விலை படிப்படியாக உயர தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தற்பொழுது ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200 யை தொட்டுள்ளது. நாடு முளுவதோம் தக்காளி விலை மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தக்காளியின் விலையை போலவே அரிசியின் விலையை கிலோவுக்கு ரூ10 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். காலநிலை மாற்றத்தால் பருவம் தவறி பெய்யும் கனமழையால் காய்கறிகள் மற்றும் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது என்று வியாரிகள் தெரிவித்துள்ளனர்.

Central governments new move The price of rice in Tamilnadu is again low read it

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அரிசியின் தட்டுப்பாட்டை குறைக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி தவிர மற்ற அரிசிக்கு தடை விதித்துள்ளது. இதனால் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த அரிசி மூட்டைகள் மீண்டும் உள்நாட்டு சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசியின் விலை தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. அதன்படி, ஸ்டீம் ரைஸ், வெள்ளை பொன்னி அரிசி, வெள்ளை பொன்னி புழுங்கல் அரிசி போன்ற அரிசி வகைகள் கிலோவிற்கு 2 ரூபாய் வரை குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM