இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராக இளைய தளபதி விஜய் இருக்கிறார். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு favorite நடிகராகவும் இவர் உள்ளார். அந்த அளவிற்கு, தன் நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டுள்ளார் என்றுதான் சொல்லணும். இவர் நடிப்பதில் மட்டுமல்லாமல் பாடலும் பாடி வருகிறார். இவர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலாவது நடிகர் விஜய் பாடிய பாடலாக இருக்கும். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் அடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், தற்பொழுது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து, விஜய் நடிக்கும் அடுத்த படம் தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின், தளபதி 68 படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படாத நிலையில், தற்பொழுது ஒரு புதிய தகவல் இணையத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது. தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. நடிகர் விஜய் முன்னதாக ‘அழகிய தமிழ் மகன்’ மற்றும் ‘கத்தி’, ‘மெர்சல்’ போன்ற திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடுத்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் இவருக்கு ஹிட் கொடுத்த நிலையில் இந்த படமும் வெற்றிமாலை சூடும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- உடனே அப்ளை பண்ணுங்க! அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை தராங்களாம்! Diploma, Any Degree படிச்ச எல்லாருமே அப்ளை பண்ணலாம்!
- ரூ.23,500 சம்பளத்துல மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு..! அப்ளை பண்ண நீங்க ரெடியா இருக்கீங்களா?
- ஆரம்ப சம்பளமே 44 ஆயிரம் ரூபா! அட்டகாசமான வேலை வாய்ப்பை வெளியிட்டுள்ளது BECIL நிறுவனம்!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் 1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்! VOC துறைமுக அறக்கட்டளையில் வேலை!
- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!