உங்களுக்காக மத்திய அரசு வேலை வந்திருக்கு..! மிஸ் பண்ணாம நேர்காணலுக்கு செல்லுங்க..!

0
26
CECRI Karaikudi Recruitment 2023 Notification The central government has come to work for you..! Go to the interview without missing it..!

CECRI Karaikudi Recruitment 2023 Notification

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Project Associate, Project Assistant (திட்ட இணை, திட்ட உதவியாளர்) பணிக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு 9 காலியிடங்கள் உள்ளது. இந்த CECRI-யில் பணியாற்ற ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவங்க இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். CECRI Karaikudi அறிவித்த இந்த வேலைக்கு தகுதி உள்ளவங்க வருகின்ற மே மாதம் 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நேரடியாக வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த பணிக்கான வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற கூடுதல் விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். படித்து பயன்பெறவும்.

CECRI Karaikudi RECRUITMENT 2023 | DIRECT WALK-IN INTERVIEW FOR Project Associate, Project Assistant

நிறுவனத்தின் பெயர்Central Electrochemical Research Institute (CECRI)
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://cecri.res.in/
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2023
பதவிProject Associate, Project Assistant
காலியிடங்கள்மொத்தம் 09 காலியிடங்கள்

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதத்திற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரைக்கும் சம்பளம் வாங்கிடலாம்.

கல்வித்தகுதி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Diploma, BE/ B.Tech, M.Sc படிப்பை முடிச்சிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்த அறிவிப்பில், வயது வரம்பு 30 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.

வேலை செய்யும் இடம்:

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் காரைக்குடியில் (Jobs in Karaikudi) வேலை செய்யலாம். மத்திய அரசு வேலைய தேடுறவங்களுக்கு இது ஒரு அட்டகாசமான வாய்ப்பு.

தேர்வு செயல்முறை:

நேர்க்காணல் முறையில் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்கிறது.

முக்கிய தேதிகள்:

நேர்க்காணல் நடைபெறும் தேதி31 மே 2023 & 01 ஜூன் 2023

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் மற்றும் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு 31 மே 2023 & 01 ஜூன் 2023 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்ரஸ்க்கு நேர்க்காணலில் (Walk-in Interview) கலந்துகொள்ளவும்.

முகவரி:

CECRI Chennai Unit, CSIR – Madras Complex, Taramani, Chennai.

CECRI Karaikudi Recruitment 2023 Notification


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here