கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் அடுத்த படம்! படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Today Cinema News 2023

நடிகர் கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனையடுத்து, 2018 ஆம் ஆண்டு மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் “வால்டர்”, “ரேக்ளா” ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்கத்தில் மூன்றாவது படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்க உள்ளார்.

Today Cinema News 2023

மேலும், டைரக்டர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் முழுக்க முழுக்க காட்டுக்குள் இப்படத்தை எடுக்கிறார்கள்.

தற்போது, நடிகர் விஜயகாந்தின் டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தோட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘படைத்தலைவன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவும் படக்குழு வெளியிட்டுள்ளது.