கேப்டன் விஜயகாந்த் நல்லடக்கம் – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை! காவல் துறை தகவல்!

Captain Vijayakanth Naladakkam Public not allowed Police information

தேமுதிக கட்சி தலைவரும் தமிழ் சினிமா நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் காலமானார். இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு ஊர்களிலிருந்தும் மற்ற மாநிலத்திலிருந்தும் ரசிகர்ள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் அவர்களின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. இதில் விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட மொத்த 200 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளதாக தெரித்துள்ளனர்.

Also Read >> பொங்கல் 2024 பண்டிகை: வந்தே பாரத்தின் சிறப்பு ரெயில்… சென்னை TO நாகர்கோவில்

மேலும், கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்க நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியிகியுள்ளது. தற்போது தேமுதிக அலுவலகத்தில் கூடியிருக்கும் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறித்தி வருகின்றனர்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top