Today Latest Cinema News 2023
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து செம்ம மாஸ்காட்டி வருகிறார். கடைசியாக தனுஷின் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ரீலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டது.

அதனையடுத்த்து, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் 1930 மற்றும் 40 காலகட்டத்தில் எடுக்கப்படும் ஒரு வரலாற்றுப் படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் தனுஷின் பிறந்த நாள் ஜூலை 28-ஆம் தேதி கொண்டாட பட உள்ள நிலையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று நள்ளிரவு 12:01 மணிக்கு ‘கேப்டன் மில்லர்’ படத்தோட டீசர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- உடனே அப்ளை பண்ணுங்க! அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை தராங்களாம்! Diploma, Any Degree படிச்ச எல்லாருமே அப்ளை பண்ணலாம்!
- ரூ.23,500 சம்பளத்துல மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு..! அப்ளை பண்ண நீங்க ரெடியா இருக்கீங்களா?
- ஆரம்ப சம்பளமே 44 ஆயிரம் ரூபா! அட்டகாசமான வேலை வாய்ப்பை வெளியிட்டுள்ளது BECIL நிறுவனம்!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் 1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்! VOC துறைமுக அறக்கட்டளையில் வேலை!
- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!