மனித உரிமை போராட்டத்தை பேசும் கேப்டன் மில்லர்…! படத்தை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Captain Miller

டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் கேப்டன் மில்லர். இப்படமானது வரலாற்று சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடுமையான எதிர்ப்புகளுக்கு பின்னர் நேற்றைய தினத்தில் திரையங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. மேலும், வசூலில் முதலிடம் பிடிக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து தனது வாழ்த்தை தெரிவித்தார்.

Also Read >> Today Gold Rate : மட மடவென ஏறிய தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம் இதோ…!

இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி கேப்டன் மில்லர் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைவதற்கான உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்ற அருமையானதொரு படைப்பை மிக சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷிற்கும், நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகை பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.

மேலும், மனிதருடைய உரிமை போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்ட கதைக்களத்தின் ஊடாக மிக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர். என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சினிமா நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top