பொங்கல் பரிசுடன் உரிமைத்தொகையும் கிடைக்குமா? தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பரிசுடன் உரிமைத்தொகையும் கிடைக்குமா? தமிழக அரசு அறிவிப்பு!

இந்த வருடத்தில் டிசம்பர் மாதம் முடியும் நிலையில், அடுத்து பொங்கல் வருவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. இந்த பொங்கலை சந்தோசமாக கொண்டாட முடியுமா என தெரியவில்லை. தமிழகத்திலே வந்த மிக்ஜாம் புயல் மக்களை ஒரு வழியாக்கி விட்டது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்து பொங்கல் வருகிறது. அதில் அரசு தரும் பரிசு தொகுப்பு குறித்த செய்திகளுக்காக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவை சாமானிய மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

தமிழகத்திலே திமுக அளித்த வாக்குறிதியின் படி மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றியது. இதுவரைக்கும் 4 மாதங்கள் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசுடன் உரிமைத்தொகை ரூ.1000 முன் கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என குடும்ப தலைவிகள் காத்து கொண்டிருக்கின்றர்.

Also Read >> தமிழகத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை! 99 Data Entry Operator வேக்கன்சி இருக்குதாம்…!

ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதில் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி அடங்கிய தொகுப்பு இருக்கும். மேலும் ரூ.1000 பொங்கல் தொகையாகவும் வழங்கப்படும். அதே போல 2024 ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 அதனுடன் பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வங்கி கணக்கில் போடப்படுமா இல்லை தனித்தனியாக வழங்கப்படுமா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top