இன்று இரவு இத்தனை மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காது! ஏன்?

0
50

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. இந்த புயல் தற்போது வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் அதி கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு போன்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் (இன்று) இரவு பஸ்கள் இயங்காது என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அந்த வகையில், இந்த மாண்டஸ் புயல் இன்று இரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், 3 மணி நேரத்திற்கு பிறகும் பேருந்துகள் இயங்காது என்று தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் மட்டும் இரவில் 550 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், இன்று இரவு பேருந்துகள் இயங்காது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here