இதுவரை பேருந்தே செல்லாத கிராமத்திற்கு பேருந்து இயக்கம்..! கொண்டாட்டத்தில் மக்கள்!

0
44

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கோட்டையேந்தல் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில் இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இருந்தது இல்லை. இதனால் இவர்கள் சாயல்குடி அல்லது ராமநாதபுரம் செல்ல வேண்டுமெனில் ஊரில் இருந்து 4 கிலோ மீட்டர் சென்று அங்கிருந்து இராமநாதபுரம் சாயல்குடி ECR சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், நீண்ட நாள் பேருந்து வசதி வேண்டி கோரிக்கையை முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பனிடம் தங்கள் ஊரின் வழியாக ராமநாதபுரம் அல்லது சாயல்குடி சென்று வர பேருந்து ஏற்பாடு வசதி செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, அமைச்சர் கோரிக்கை பரிசீலிக்க பட்டு சாயல்குடியில் இருந்து கோட்டையேந்தல் வழியாக சென்று அதே வழியில் மீண்டும் செல்லும்படி புதிய வழித்தடம் வழியாக அரசு பேருந்து தொடங்கப்பட்டது. இதனை ஒட்டி கோட்டையேந்தல் கிராம மக்கள் அந்த வழியாகவந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து, தேங்காய் உடைத்து வரவேற்று பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here