
நடிகரும், இசையமைப்பளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டிடிகே சாலையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடை மகள் லாரா. பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இன்று அதிகாலை மூன்று மணியளவில் விட்டில் உள்ள தன்னுடைய அறையில் மின் விசிறியில் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை என்ற காரணத்தால் உள்ளே சென்று பார்த்த பெற்றோர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. மகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
இந்த தகவலை அறிந்த உடன் போலீசார் விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் லாரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.