இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ஜவான் ‘ திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் நடித்துள்ளார். இவரை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் சேர்ந்து நடித்துள்ள இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை தாம்பரம் அருகே உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் அட்லி ஆகியோர் கலந்துகொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.
இதனை அடுத்து துபாயில் புர்ஜ் கலிபா கட்டடத்தில் நடைபெறவுள்ள ஜவான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்றனர். விமான நிலையம் சென்ற இசையமைப்பாளர் அனிருத்தை கண்ட அவரது ரசிகர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க முயன்றதால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களை ரசிகர்களிடம் இருந்து பாதுகாப்பாக அழைத்து சென்று வழி அனுப்பி வைத்தனர்.