பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு பழங்கள், காய்கறிகள், ஊட்டச்சத்துகள், தானிய வகைகள், அசைவ வகைகள், கீரை வகைகள் என அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் உணவுகளில் பார்த்து பார்த்து கவனம் செலுத்தும் நாம் ஏன்… அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளில் பாகற்காயும் இருப்பதை மறந்து விடுகிறோம்?
இதற்கு காரணம், பாகற்காய் மிகுந்த கசப்பு சுவை கொண்டது என்பதால்தான். இதனால் பலரும் பாகற்காயை மறந்து விடுகிறோம்! பாகற்காயின் நன்மைகள் பற்றி நமக்கு ஓரளவுக்கு தெரிந்து இருக்கும். ஆனால், கர்ப்பிணிகளுக்கும் பாகற்காய் எந்த அளவிற்கு நன்மைகளை கொடுக்கிறது என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Bitter Gourd Benefits in Pregnancy
1. கர்ப்ப காலத்தில் செரிமான கோளாறுகளை சரிசெய்யும் ஃபைபர் சத்து!

கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளாக மூல நோயும் மலச்சிக்கலும் உள்ளது. இதற்கு பாகற்காய் ஒரு நல்ல தீர்வு! பாகற்காயில் உள்ள அதிக ஃபைபர் சத்து, அதாவது நார்ச்சத்து கர்ப்ப காலத்தில் ஏற்படக் கூடிய இது போன்ற பிரச்சனைகளை குறைத்து, செரிமான கோளாறுகளை சமாளிக்க உதவுகிறது.
2. பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்!

வைட்டமின் சி பாகற்காயில் இருப்பதால், கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து, மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகவும் செயல்படுகிறது. மேலும், இந்த வைட்டமின் சி ஆனது கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியாக்களை எதிர்த்துப்போராடி கருவில் உள்ள குழந்தையை பாதுகாக்கிறது.
3. கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான மாற்றங்கள் அவசியம்:

ஒரு பெண்ணிற்கு வாழ்வில் குறிப்பிட்ட சில தருணங்களே மகிழ்ச்சியானதாக அமையும். அதனை மீண்டும் திரும்ப பெற முடியாது. அது போன்றதொரு தருணம் தான் கர்ப்ப காலம் என்பது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் நிகழக்கூடும்.
இதனை சமாளிக்க, உணவு முறையும் வாழ்க்கை முறையும் சரியானதாக இருத்தல் வேண்டும். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வகையில், சில ஆரோக்கியமான மாற்றங்களை கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
4. கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான எதிர்ப்பு பண்பினையுடைய பாகற்காய்!

இயற்கையாகவே நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை பாகற்காய் பெற்றுள்ளது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பகால நீரிழிவு நோயை எதிர்த்து போராடிட, இதில் உள்ள பாலிபெப்டைட்-பி மற்றும் சரண்டன் போன்ற ஒரு சில ஊட்டச்சத்துக்கள் இந்த கசப்பு சுவை உள்ள பாகற்காயில் உள்ளது. இது உடல் நலத்துக்கு பெரிதும் நல்லது.
5. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கான முக்கிய மினரலாக ஃபோலேட்!

ஃபோலேட் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஒரு முக்கிய மினரலாக செயல்படுகிறது. இந்த மினரல் கருவில் உள்ள குழந்தைக்கு நரம்பு குழாய் குறைபாடு வராமல் பாதுகாக்கவும் ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது. ஒரு பவுல் பாகற்காயில் தினசரி கர்ப்பிணிகளுக்கு தேவைப்படும் ஃபோலேட்டின் கால் பகுதி அடங்கி உள்ளது. இதனால், இதனை உணவில் எடுத்துக் கொள்ளுவது மிகவும் நல்லது.
6. கர்ப்பிணிகளின் குடல் இயக்கத்தையும் செரிமான அமைப்பையும் சீராக்க:

கர்ப்ப காலத்திலுள்ள பெண்கள் பாகற்காயை உணவில் எடுத்துக்கொள்வதால், செரிமான அமைப்பையும் குடல் இயக்கத்தையும் சீராக மாற்றுவதற்கு இது உதவி புரிகிறது. பாகற்காயில் இருக்க கூடிய ஊட்டசத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும், பசியின்மைக்கு சிகிசையாகவும், குடல் புழுக்களை அழித்து, உடலிலிருந்து நீக்கவும் பயன்படுகிறது.
7. கர்ப்ப காலத்தில் திருப்தியான பசி உணர்வுக்கு நார்ச்சத்துள்ள பாகற்காய்!

கர்ப்பிணிகளுக்கு பொதுவாகவே, பசி உணர்வு அதிகமாகவே இருக்கும். இதற்கு ஜங்க் ஃபுட்கள் போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவர். இதற்கு பதிலாக, கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் பாகற்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் அதிகமாக ஃபைபர் சத்து, அதாவது நார்சத்து நிறைந்துள்ளதால், உணவுக்கு பின் திருப்தியானதொரு உணர்வினை உணர வைக்க உதவுகிறது. இதனால், அதிக கலோரிகள் கொண்டவையாக உள்ள ஜங்க் ஃபுட்களின் நுகர்வை உணவில் இருந்து குறைத்து கொள்ள இது மிகவும் உதவுகிறது.
8. கர்ப்பிணிகளுக்கு வளர்சிதை மாற்றத்துடன் ஊட்டச்சத்தினை அதிகரிக்க:

இயற்கையாக கிடைக்கும் காய்கறி வகைகளில் ஒன்றாக உள்ள பாகற்காய் அதிக சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. குழந்தையின் வளர்ச்சிக்கு சரியான ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது என்றாலுமே, அதிக கசப்பு சுவை கொண்டது என்றவொரு காரணத்திற்காக அதனை உணவில் எடுத்துக் கொள்வதை தவிர்த்து வருகிறோம்.
பாகற்காயில் பெண்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருப்பதால், கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து உண்பதால், உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் நிச்சயமாக அதிக கவனம் இருக்க வேண்டும். தினசரி எடுத்து கொள்ளும் உணவில் பச்சை காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் போன்ற ஆரோக்கியாமான அதிகப்படியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.
RECENT POSTS IN VALAIYITHAL:
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023