கடந்த 2019ஆம் ஆண்டில் மறைந்த ஆந்திராவின் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி வாழ்க்கையை ராகவா இயக்கத்தில் ‘யாத்ரா’ என்னும் பெயரில் திரைப்படத்தை வெளியிட்டது. இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி வேடத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து ‘யாத்ரா -2’ பாகத்தை தயாரிக்கவுள்ளனர்.
யாத்ரா -2 பாகம் படத்தில் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளனர். அவரது இளம் வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து தற்போது ஆந்திர முதல் மந்திரியாகி இருப்பதுவரை நடந்த உண்மை சம்பவங்கள் அனைத்தும் இடம்பெறும் என கூறியுள்ளனர்.
இப்படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் சூர்யா நடிக்கப்போவதாக பெயர் அடிப்பட்டது. ஆனால் தன்னிடம் வந்து யாரும் அணுகவில்லை என பதிலளித்தார். மேலும் இப்படத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் தற்போது ஜீவாவை தான் தேர்வு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தது.
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!